கல்யாணத்திற்குப் போக உங்களுக்கு இஷ்டமா? நிறைய பேருக்கு இஷ்டம்தான்; ஏனென்றால் அங்கே சந்தோஷம் களைகட்டியிருக்கும். மணமகனும் மணமகளும் புத்தாடையில் புதுப்பொலிவுடன் காட்சியளிப்பார்கள். அதுமட்டுமல்ல அவர்களுடைய முகமும் மகிழ்ச்சியில் பிரகாசிக்கும்! அந்த நாளில் அவர்கள் சந்தோஷத்தில் மிதப்பார்கள். ஒளிமயமான எதிர்காலம் அவர்கள் கண்ணில் தெரியும்!
ஆனால் இன்று திருமணங்கள் சின்னாபின்னமாகி வருவதை நாம் கண்ணாரக் காண்கிறோம். புதுமணத் தம்பதியர் சந்தோஷமாய் குடும்பம் நடத்த வேண்டுமென்பதே நம் அனைவரின் ஆசையாக இருந்தாலும் 'இவர்கள் என்றைக்கும் இதேபோல் சந்தோஷமாய் இருப்பார்களா? கடைசிவரை இணைபிரியாமல் வாழ்வார்களா?' என்று சில சமயங்களில் நாம் யோசிக்கலாம். ஆனால் கடவுள் கொடுத்திருக்கும் அறிவுரைகளைக் கணவனும் மனைவியும் ஏற்று நடந்தால் என்றைக்கும் மண வாழ்வில் மகிழ்ச்சி காண்பார்கள் காலமெல்லாம் இணைபிரியாமல் வாழ்வார்கள்.
No comments:
Post a Comment