விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பி - Diyaculture

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 6, 2018

விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பி

ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி- வீடியோ சென்னை: ரஜினிகாந்த் 'காலா' படத்தை அடுத்து இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்படி விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பியாக நடிக்க இருக்கிறாராம்.


ரஜினி ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைய இருக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. அதோடு படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.


சூப்பர்ஸ்டாரின் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்படி விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பியாக நடிக்க இருக்கிறாராம்.

இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் முதன் முறையாக ரஜினியுடன் இணையவுள்ளார். மேலும் இதில் நடிக்கும் மற்ற நடிகர்இ நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் யார் என்கிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பீட்சா' 'இறைவி' படங்களில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். எனவே ரஜினி நடிக்கும் இந்த படத்திலும் விஜய்சேதுபதி நிச்சயம் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. ரஜினியுடன் விஜய்சேதுபதி இணையும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages