மும்பை: ஐபிஎல் சீசன்-11 தொடரில் தடை முடிந்து களமிறங்க உள்ள சென்னை சூப்பர் கிங்சில் மகேந்திர சிங் டோனி ரெய்னா ஜடேஜா ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் ராஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி உள்ளிட்ட இரு அணி வீரர்களும் வெவ்வேறு அணிகளில் விளையாடினர். தடை முடிந்த நிலையில் வரும் ஏப்ரலில் தொடங்க உள்ள ஐபிஎல் சீசன்-11 தொடரில் சிஎஸ்கே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்க உள்ளன.
இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது அதற்கு முன்பாக அணிகள் தங்களின் முக்கிய வீரர்கள் 3 பேரை தக்க வைக்கலாம். ஏலத்தின் போது, 2 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதன்படி எந்தெந்த அணிகள் தங்களின் வீரர்களை தக்க வைக்கின்றன என்பது தொடர்பான முடிவை அறிவிக்க வேண்டிய கடைசி நாள் நேற்றுடன் முடிந்தது. அதில் ஒவ்வொரு அணிகளும் தக்க வைத்த வீரர்கள் பட்டியலை நேற்றிரவு ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே
அணியில் கேப்டன் டோனி ரூ.15 கோடிக்கும்,
ரெய்னா ரூ.11 கோடிக்கும்
ஜடேஜா ரூ.7 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோஹ்லி அதிகபட்சமாக ரூ.17 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வார்னர் ரூ.12 கோடிக்கும் புவனேஸ்வர் குமார் ரூ.8.5 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2 முறை கோப்பை பெற்று தந்த கேப்டன் கம்பீர் தக்க வைக்கப்படவில்லை. இதனால்
அவர் மீண்டும் கொல்கத்தா அணியில் இருப்பாரா என்பது சந்தேகமாகி உள்ளது.
No comments:
Post a Comment