நம்மில் பலரும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் நுழைந்ததற்கு கண்டிப்பாக ஒரு முறையாவது நம் அம்மாவிடம் திட்டு வாங்கியிருப்போம். இந்து மத மரபுகளின் படிமாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் அந்த நேரத்தில் தூய்மையற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதனால் மாதவிடாய் என்றாலே நமக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைகிறது. மரபுகளின் படி பெண்ணின் மாதவிடாய் காலத்தின் போது அவர்கள் கோவிலுக்கு உள்ளேயோ அல்லது வீட்டினுள் இருக்கும் பூஜை அறையின் உள்ளேயோ செல்ல அனுமதிப்பதில்லை. வீட்டின் மற்ற உறுப்பினர்களை விட்டு தள்ளியே இருக்க வேண்டும்; கூந்தலை வார கூடாது; ஊறுகாயை தொடக்கூடாது; கண்மை அல்லது வேறு எந்த ஒரு அழகு சாதன பொருட்களையும் தொடக்கூடாது; சமலயறைக்குள் நுழையக் கூடாது; இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மாதவிடாய் காலத்தின் போது ஒரு எளிய வாழ்க்கையை அப்பெண் வாழ்ந்திட வேண்டும்.
இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்!
பழங்காலத்தில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுகையில் ஒரு இருட்டு அறையில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதே போல் மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் மாதவிடாய் காலம் முடியும் வரை ஒரே ஒற்றை ஆடையை மட்டும் தான் அணிய வேண்டும்; கூந்தலை வாரக் கூடாது; யாரிடமும் பேசக் கூடாது; எளிய உணவை தான் உண்ண வேண்டும்; வெறும் தரையில் தான் படுக்க வேண்டும்; தூய்மையாக கருதப்படும் எதையும் தொடக்கூடாது. அதனால் தான் மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்களை வீட்டில் நடக்கும் பூஜைகள் மற்றும் சுப காரியத்தில் பங்கு பெற அனுமதிப்பதில்லை.
இந்து மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை? சரி மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்களை தூய்மையற்றவர்களாக ஏன் இந்து மதம் கருதுகிறது என்பதற்கான காரணங்கள் உங்களுக்கு தெரியுமா?
திரௌபதி துயிலுரித்தல்
மகாபாரதத்தில் சதுரங்க சூதாட்டத்தில் திரௌபதியை யுதிஷ்டர் இழந்தவுடன் திரௌபதியை சபைக்கு இழுத்து வர துச்சாதனன் சென்றான். அப்போது திரௌபதி மாதவிலக்கு (ராஜஸ்வலா) காலத்தில் இருந்தாள். அதனால் ஒரு தனிமையான அறையில் ஒரே ஒரு துணியை மட்டும் அணிந்து கொண்டிருந்தாள். அக்காலத்தில் மாதவிடாய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்துள்ளது என இதுவே நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அப்படிப்பட்ட நிலையில் உள்ள ஒரு பெண்ணை அவமானப்படுத்துவது மிக உயரிய பாவமாக கருதப்பட்டது.
மகாபாரதத்தில்இ சதுரங்க சூதாட்டத்தில் திரௌபதியை யுதிஷ்டர் இழந்தவுடன் திரௌபதியை சபைக்கு இழுத்து வர துச்சாதனன் சென்றான். அப்போது திரௌபதி மாதவிலக்கு (ராஜஸ்வலா) காலத்தில் இருந்தாள். அதனால் ஒரு தனிமையான அறையில் ஒரே ஒரு துணியை மட்டும் அணிந்து கொண்டிருந்தாள். அக்காலத்தில் மாதவிடாய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்துள்ளது என இதுவே நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அப்படிப்பட்ட நிலையில் உள்ள ஒரு பெண்ணை அவமானப்படுத்துவது மிக உயரிய பாவமாக கருதப்பட்டது.
ஏன் பெண்கள் கோவில்களுக்குள் நுழைய முடிவதில்லை?
கடைசியாக இந்திரனின் பாவத்தில் பங்கு போட பெண்கள் முன் வந்தனர். இதுவே மாதவிடாயில் வந்து முடிந்தது. மாதவிலக்கு காலத்தின் போது பெண்கள் தூய்மையற்றவர்களாக இருப்பார்கள். அதற்கு பிரதி பலனாக ஆண்களை விட பெண்களுக்கே அதிக பாலின இன்பம் கிடைக்கும் என்ற வரத்தை அவர்களுக்கு இந்திரன் அளித்தான். இந்திரனின் பாவத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதால்இ மாதம் ஒரு முறை பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும்; ஒரு பிராமணனை (பிராம ஹாத்யா) கொன்ற பழி அவர்களை வந்து சேர்ந்தது. அதனால் தான் மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் அவர்களால் கோவில்களுக்குள் நுழைய முடிவதில்லை.
தனிமைப்படுத்தப் படுவதற்கான காரணங்கள்
மாதவிலக்கு ஏற்படும் போது பெண்கள் தனிமைப்படுத்தப் படுவதற்கான முதல் காரணம் - பெண்கள் சுலபத்தில் தொற்றுக்களால் பாதிக்கப்படுவார்கள். அதனால் தொற்றுக்களால் பாதிக்கப்படாமல் இருக்க அவர்கள் தனியாக வேறு அறையில் வைக்கப்பட்டார்கள். இரண்டாவதாகஇ மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் போதுஇ வீட்டு வேலைகள் செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம்இ இந்நேரத்தில் பெண்களின் உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு போதிய அளவிலான ஓய்வு அவசியம். அதனால் தான் வீட்டு வேலைகளில் ஈடுபடாமல் அவர்கள் ஓய்வு அறையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும் மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்கவும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதற்கு காரணம்இ மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் காலத்தில்இ பெண்களின் உடலில் இருந்து எதிர்மறையான ஆற்றல் திறன் உருவாகும். இது அவர்களை சுற்றியுள்ளவர்களின் மீது தாக்கத்தை உண்டாக்கும்
திரிக்கப்பட்ட மரபுகள்?
பெண்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு சில மாதவிடாய் மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவைகளில் பல மரபுகள் மூட நம்பிக்கைகளாக விளங்கியுள்ளது. உதாரணத்திற்குஇமாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் பெண் ஊறுகாய் ஜாடியை தொட்டால்இ அது கெட்டு போய்விடும். இக்காலத்தில் பெண்களை தனிமைப்படுத்துவதால் அவர்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்ல. மாதவிலக்கு என்பது ஆரோக்கியமான பெண்ணின் அறிகுறியாகும். இது ஒன்றும் அவமானப்படும் விஷயமே அல்ல. வெறுமனே மூட நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு பெண்ணின் மீது கட்டுப்பாடுகளை கொண்டு வரக்கூடாது. அப்படி செய்வது அவர்களை அவமானப்படுத்தும் விதமாக அமையும்.
காலத்தின் மாற்றங்கள்
நாகரீக உலகை நோக்கி நாம் போய் கொண்டிருக்கும் இந்த வேளையில் மாதவிடாய் கட்டுப்பாடுகள் மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் காலத்தில் வேலை பார்க்கும் பெண்ணை வீட்டில் இருக்க சொல்லி உலகத்தை விட்டு அவர்களை தனிமைப்படுத்த எதிர்ப்பார்ப்பது நடக்காதல்லவா? மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும் போதுஇ இப்போது கூட பெண்கள் கோவில்களுக்கு செல்லவோ பூஜைகள் செய்யவோ அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் சமுதாய தனிமைப்படுத்துதல் மற்றும் அவமானங்கள் இப்போது நடப்பதில்லை. நம் மகள்கள் இன்னும் சிறந்த உலகத்தில் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்றும் மாதவிலக்கை எண்ணி அவமானப்பட வேண்டாம் என்றும் நாம் நம்பிக்கை கொள்ளலாம். காரணம் மேற்கூறிய அனைத்திற்கும் மேலாக மாதவிடாய் என்பது ஆரோக்கியமான பெண்ணிற்கான அறிகுறியாகும்.
No comments:
Post a Comment