1993-ம் ஆண்டு வெளியான படம் புதியமுகம். ரேவதி ஹீரோயினாகவும் அவரது முன்னாள் கணவர் சுரேஷ் சந்திர மேனன் ஹீரோவாகவும் நடித்திருந்த படம். இவர்களுடன் வினித் ரவிச்சந்திரன் ராதாரவி நாசர் கஸ்தூரி நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். சுரேஷ் சந்திர மேனனே தயாரித்திருந்தார். வில்லனால் பாதிக்கப்பட்ட ஹீரோ அறுவை சிகிச்சை மூலம் தன் முகத்தை மாற்றிக் கொண்டு பழிவாங்குகிற கதை..

இந்தப் படத்தை 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரீமேக் செய்கிறார்கள். ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். மைனா, சாட்டை படங்களை தயாரித்த ஜான் மேக்ஸ் ஸ்டூடியோ தயாரிக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

நம்பியார், நண்பன் படத்திற்கு பிறகு ஸ்ரீகாந்த் நடித்த பாகன், ஓம் சாந்தி ஓம், நம்பியார், சவுகார்பேட்டை படங்கள் கைகொடுக்காத நிலையில் ஸ்ரீகாந்த் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் களம் இறங்கியிருக்கிறார்.
No comments:
Post a Comment